சேலம் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 1 Aug 2021 1:56 AM IST (Updated: 1 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 100-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 84 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 73 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 36 பேரும், ஆத்தூர் பகுதிகளில் 15 பேரும், நகராட்சி பகுதிகளில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 பேர் பலி
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 132 பேர் குணமடைந்து விட்டதால் வீடு திரும்பினர். தொடர்ந்து 1,137 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும், 63, 43 வயதுடைய ஆண்களும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 29 வயதுடைய வாலிபரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார். இவர்கள் உள்பட கொரோனாவுக்கு 1,554 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story