கூடலூரில் 2 பேர் கைது
25 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர்-கேரள எல்லையான வழிக்கடவு பகுதியில் கேரள போலீசார் நேற்று மாலை 4 மணிக்கு வாகன தணிக்கை செய்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே 10-க்கும் மேற்பட்ட சிறிய மூட்டைகளில் கஞ்சாவை கடத்த முயன்றது தெரியவந்தது. மொத்தம் 25 கிலோ கஞ்சா மூட்டைகள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அதை கடத்திய மலப்புரம் மாவட்டம் காடம்புழாவை சேர்ந்த சனல்குமார் (26), முகமது ராபி (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி கர்நாடக மாநிலம் குண்டல்பெட்டுக்கு கொண்டு வந்து காய்கறி மூட்டைகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதாக போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story