பாலீஷ் போடுவதற்கு உரிமையாளர் கொடுத்த 19 பவுன் நகையுடன் மாயமான நகைக்கடை ஊழியர்
சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் வினோத்குமார் (வயது 40). இவரது கடையில் 15 பேர் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடையில் வேலை செய்து வரும் மேற்கு வங்கமாநிலத்தைச் சேர்ந்த ரம்ஜான் அலி (45) என்பவரிடம் 600 கிராம் தங்க நகையை கொடுத்து ஒரு அறைக்குள் சென்று பாலீஷ் செய்து கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த வினோத்குமார், பாலிஷ் போடும் அறைக்குள் சென்று பார்த்தபோது ரம்ஜான் அலி அங்கிருந்து மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அவர் கொடுத்து அனுப்பிய நகையில் 150 கிராம் ( 19 பவுன்) அளவிலான நகைகள் திருட்டு போனதும் தெரியவந்தது. இதுகுறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில், புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரம்ஜான் அலியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story