தமிழ் வழியில் படித்ததாக விண்ணப்பித்து குரூப்-1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்
தமிழ் வழியில் படித்ததாக விண்ணப்பித்து குரூப்-1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுள் தமிழ் வழியில் படித்துள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழிக்கல்வியில் படித்ததற்கான சான்றிதழ்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வருகிற 5-ந்தேதி வெளியிடப்பட உள்ள உரிய படிவத்தில், வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந்தேதி வரை (வேலைநாட்களில்) ‘ஸ்கேன்' செய்து அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதுகுறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு அதாவது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாக குறிப்பிட்டு முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். இதைத்தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இதுதொடர்பான குறிப்பாணை 5-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்சொன்ன நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை என்றால், அவர்களுடைய விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. இது போல் தமிழ் வழியில் படித்த சான்றிதழ்களை கேட்டு இருப்பதை வைத்து பார்க்கும்போது, அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விவரம் கேட்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

Related Tags :
Next Story