உடுமலை வாரச்சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலைவீழ்ச்சியடைந்தது.
உடுமலை வாரச்சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலைவீழ்ச்சியடைந்தது.
உடுமலை
உடுமலை வாரச்சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலைவீழ்ச்சியடைந்தது. அதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தக்காளி சாகுபடி
உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் தக்காளி சாகுபடி அதிகமாக உள்ளது. விவசாயிகள் தக்காளி பழங்களை உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வருகின்றனர். அங்கு கமிஷன் மண்டி உரிமையாளர்கள் அந்த தக்காளிபழங்களை ஏலம் விடுகின்றனர்.
ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்து தக்காளிபழங்களை சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.ஏலத்தொகையில் கமிஷன் தொகையை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை விவசாயிகளுக்கு கொடுக்கின்றனர்.
விலை குறைந்தது
தற்போது தக்காளி வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறைந்துள்ளது.
உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கமிஷன் மண்டிகளில் நேற்று முன்தினம் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி தரத்தை பொறுத்து ரூ.70 முதல் ரூ.170 வரை ஏலம்போனது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் போன்றே நேற்றும் சுமார் 30 ஆயிரம் பெட்டி தக்காளி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
ஆனால் வியாபாரிகளின் வருகை சிறிதுகுறைவாக இருந்து.இந்த நிலையில் நேற்று ஒருபெட்டி தக்காளி தரத்தைப்பொறுத்து ரூ.70 முதல் ரூ.140 வரை விற்றது. ஒரேநாளில் பெட்டிக்கு ரூ.30 குறைந்தது.
இப்போது செடியில் இருந்து தக்காளி பழங்களை பறிப்பதற்கு கூலி ஆட்கள் சரியாக கிடைப்பதில்லை. அதனால் அதிக கூலி கொடுத்து பறித்து வரப்படும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story