கோவை சென்னை சிறப்பு ரெயிலில் கூடுதல் வசதியுடன் 19 பெட்டிகள் இணைப்பு


கோவை சென்னை சிறப்பு ரெயிலில் கூடுதல் வசதியுடன் 19 பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 1 Aug 2021 9:52 PM IST (Updated: 1 Aug 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

கோவை -சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலில் நவீன வசதியுடன் 19 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.

கோவை

கோவை -சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலில் நவீன வசதியுடன் 19 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் பாதுகாப்பு

நாடு முழுவதும் ரெயில்களில் தினமும் பல லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே பழைய ரெயில் பெட்டிகளுக்கு பதிலாக கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், கோவை -சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் எண் (02675) மற்றும் சென்னையில் இருந்து கோவை செல்லும் ரெயிலில் (எண்02675) கூடுதல் வசதியுடன் 19 நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு   இயக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

படுக்கைகள் அதிகம்

பழைய ரெயில் பெட்டிகளை மாற்றிவிட்டு, மேம்பட்ட தொழில் நுட்பத்தில் தயாரான ரெயில் பெட்டிகள் (எல்.எச்.பி.) இணைக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் உள்ளன. 

பழைய ரெயில் பெட்டியில் 72 படுக்கைகள் இருக்கும். ஆனால் நவீன ரக பெட்டியில் 80 படுக்கைகள் இருக்கும். அந்த பெட்டிகள் துருப்பிடிக்காத இரும்பு மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது. 

நவீன கழிப்பிட வசதி உள்ளது.ரெயில் அதிவேகமாக சென்றாலும், பயணிகளுக்கு அதிர்வு அதிகமாக தெரியாது. சேரன் விரைவு ரெயில் மற்றும் இன்டர்சிட்டி ரெயிலில் இந்த நவீனபெட்டிகள் உள்ளன. 

தற்போது கோவை -சென்னை சிறப்பு ரெயிலில் இணைக்கப்பட்ட 19 நவீன பெட்டிகளுடன்  சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story