பன்னிமடை ஊராட்சியில் தீண்டாமை சுவர் இடித்து அகற்றம்


பன்னிமடை ஊராட்சியில் தீண்டாமை சுவர் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 1 Aug 2021 9:59 PM IST (Updated: 1 Aug 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

பன்னிமடை ஊராட்சியில் தீண்டாமை சுவரை இடித்து அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

துடியலூர்

பன்னிமடை ஊராட்சியில் தீண்டாமை சுவரை இடித்து அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

தீண்டாமை சுவர் 

கோவை துடியலூர் அருகில் உள்ள பன்னிமடை ஊராட்சிக்குட்பட்டது கொண்டசாமி நாயுடு நகர். இங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். 

இந்த நகர் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான் என்ற நகர் உருவாக்கப்பட்டது.இங்கு ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொண்டசாமி நாயுடு நகருக்கு செல்லும் சாலையின் ஒரு பகுதியில் 23 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட தீண்டாமை சுவர் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. 

கலெக்டரிடம் மனு 

இந்த சுவர் அந்தப்பகுதி மக்களை பிரிக்கும் வகையில் இருப்பதால், அந்த தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.  

இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதையடுத்து கோவை வடக்கு தாசில்தார் கோகிலாமணி, வருவாய் அதிகாரி ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசரணை நடத்தினார்கள். 

இடித்து அகற்றம் 

பின்னர் அங்கு சாலையின் ஒரு பகுதியில் கட்டப்பட்டு இருந்த 23 அடி நீளம் கொண்ட தீண்டாமை சுவர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 

மற்ற 2 இடங்களில் 10 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட சுவரை 3 அடியாக குறைக்கும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். அதை அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.


Next Story