வெள்ளகோவிலில் கால்நடை மருந்தக உதவியாளர் பினாயிலை குடித்து தற்கொலை


வெள்ளகோவிலில் கால்நடை மருந்தக உதவியாளர் பினாயிலை குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Aug 2021 10:02 PM IST (Updated: 1 Aug 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் கால்நடை மருந்தக உதவியாளர் பினாயிலை குடித்து தற்கொலை

வெள்ளகோவில், 
வெள்ளகோவிலில் கால்நடை மருந்தக உதவியாளர் பினாயிலை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கால்நடை மருந்தக உதவியாளர்
வெள்ளகோவில் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது57) இவர் தாராபுரம் அருகே உள்ள எரசனம்பாளையம் கால்நடை மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். 
இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும். கிருத்திக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
பரிதாப சாவு
இந்நிலையில் கடந்த  3 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் வீடுகளில் பயன்படுத்தும் பினாயிலை குடித்துவிட்டு அதன் பிறகு தனது மனைவியிடம் தான் பினாயிலை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனே இவரது மனைவி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை செல்வராஜ் இறந்துவிட்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயகுமார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story