பெற்றோரை தாக்கிய மகன்கள் கைது


பெற்றோரை தாக்கிய மகன்கள் கைது
x
தினத்தந்தி 1 Aug 2021 11:07 PM IST (Updated: 1 Aug 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

பூவந்தி அருகே பெற்றோரை தாக்கிய மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்புவனம்,

 பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் உலகாண்டி(வயது 54). இவரது மனைவி மகாலட்சுமி (49). இவர்களது மகன்கள் ராமகிருஷ்ணன் (36), ராஜா (30). உலகாண்டி வீட்டின் மின் இணைப்பிலிருந்து ராஜா மின்இணைப்பு பெற்று பயன்படுத்தியுள்ளார். அந்த இணைப்பிற்கு மின்கட்டணம் கட்டாததால் தந்தை உலகாண்டி, ராஜா வீட்டுக்கு சென்ற மின் இணைப்பை துண்டித்துள்ளார்.இதனால் ராமகிருஷ்ணன், ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து தந்தை உலகாண்டியை விறகு கட்டையால் தாக்கி உள்ளனர். இதை தடுக்க வந்த தாயார் மகாலட்சுமியையும் அடித்து உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகண்ணன் வழக்குபதிவு செய்து ராமகிருஷ்ணன், ராஜா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story