பலூன் பறக்க விட்டு கொரோனா விழிப்புணர்வு


பலூன் பறக்க விட்டு கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 1 Aug 2021 11:48 PM IST (Updated: 1 Aug 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

பலூன் பறக்க விட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கீழக்கரை, 
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, நகராட்சியினர் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருப்புல்லாணி, ஏர்வாடி, கீழக்கரை சீதக்காதி சாலை, பஸ் நிலையம், மீன் மார்க்கெட், காய்கறி மார்கெட் போன்ற அனைத்து வீதிகளுக்கும் சென்று பொதுமக்களை ஈர்க்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி பலூன்களை பறக்கவிட்டனர். 
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இதில் கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனிக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசி விசுவநாத துரை, வட்டார மருத்துவர் ராசிக்தீன் நகராட்சி பொறியாளர் மீரா அலி, சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story