மாவட்ட செய்திகள்

ரசாயனம் தடவிய 100 கிலோ மீன்கள் பறிமுதல் + "||" + Confiscation

ரசாயனம் தடவிய 100 கிலோ மீன்கள் பறிமுதல்

ரசாயனம் தடவிய 100 கிலோ மீன்கள் பறிமுதல்
காரைக்குடியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நடத்திய அதிரடி சோதனையில் ரசாயனம் தடவப்பட்ட 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்குடி,

காரைக்குடி பகுதியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடு, மாடு, கோழி, மீன், நண்டு, வெள்ளைப்பன்றி போன்ற இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும். அதனை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் இறைச்சிக்காக அலைமோதியது. இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் குழு மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள், போலீசார் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். நகராட்சி மீன் அங்காடி, கழனிவாசல், வாட்டர் டேங்க், பர்மா காலனி, சந்தைப்பேட்டை, கீழ ஊருணி, செஞ்சை, அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மீன்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக சில வியாபாரிகள் மீன்களில் ரசாயனத்தை தடவி விற்பனை செய்வது வழக்கம். இவை உடல் நலத்திற்கு மிகவும் கெடுதலானது. இதைத் தொடர்ந்து ரசாயனம் தடவிய 100 கிலோ மீனை டாக்டர் பிரபாவதி பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த மீன்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு குழுவினர் நகரின் பல்வேறு இடங்களில்  சோதனைகளை தொடர்ந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட 1 கிலோ பாலிதீன் பைகளை நகராட்சி சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
எழுமலை அருகே 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5. 24 டன் ரேஷன் அரிசி, 1½ டன் கோதுமை பறிமுதல்
விருதுநகரில் 24 டன் ரேஷன் அரிசி, 1½ டன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.