சட்டசபை வளாகத்தில் பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து குறைகேட்ட அமைச்சர்


சட்டசபை வளாகத்தில் பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து குறைகேட்ட அமைச்சர்
x
தினத்தந்தி 2 Aug 2021 12:34 AM IST (Updated: 2 Aug 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை வளாகத்தில் பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குறைகேட்டார்.

புதுச்சேரி, ஆக.2-
புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அங்கு 50-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அலுவலகத்தில் அனைவருக்கும் அமருவதற்கு இருக்கைகள் இல்லை. எனவே அவர்கள் தரையில் அமர்வதாக கூறினர்.
இதனை கேட்ட அமைச்சர் சாய் சரவணன் குமார் நானும் உங்களோடு அமர்கிறேன் என்று கூறி பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள ஏரி, குளம் மற்றும் பாசன வாய்க்கால்களை எதிர்வரும் பருவ மழைக்காலத்துக்குள் தூர்வார வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாததால் படித்த இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி பணத்திற்காக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை நல்வழிபடுத்துவதற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேம்படுத்திட வேண்டும். தொகுதி முழுவதும் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த அமைச்சர் சாய் சரவணன்குமார், கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Next Story