குழந்தை பெற்ற இளம்பெண் திடீர் சாவு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற இளம்பெண் திடீரென்று உயிரிழந்தார். டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் அவர் இறந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
நெல்லை:
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற இளம்பெண் திடீெரன்று உயிரிழந்தார். டாக்டர்களின் தவறான சிகிச்சையில்தான் அவர் இறந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இளம்பெண் சாவு
நெல்லை பேட்டையைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவருடைய மனைவி மீனா (வயது 26). இவர் தலைபிரசவத்திற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் இரவு 8.30 மணியளவில் மீனாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் பரிதாபமாக இறந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இதற்கிடையே டாக்டர்களின் தவறான சிகிச்சையால்தான் மீனா இறந்ததாக கூறி, அவருடைய கணவர், உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
உடனே ஐகிரவுண்டு போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story