மாவட்ட செய்திகள்

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை + "||" + Grandmother committed suicide

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மூலைக்கரைப்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மனைவி பூரணம்மாள் (வயது 76). இவரது மகள்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். பூரணம்மாள் மட்டும் தனியாக அவரது வீட்டில் வசித்து வந்தார்.

முதுமை காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த பூரணம்மாள் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் வைத்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மூலைக்கரைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மூதாட்டி தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
2. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
விளாத்திகுளம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. பெண் தீக்குளித்து தற்கொலை
எட்டயபுரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சிவகிரி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை
மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.