கோவிலில் ஆண்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு


கோவிலில் ஆண்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Aug 2021 1:14 AM IST (Updated: 2 Aug 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

மழை வேண்டி கோவிலில் கிடா வெட்டி, பொங்கல் வைத்து ஆண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள செங்கமலையார் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கிடா வெட்டி, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். மழை பெய்ய வேண்டி நடைபெறும் இந்த வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். அதன்படி நேற்று அந்த கோவிலில் வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி அப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவிலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் கிடா மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வந்து வழிபட்டு, பின்னர் அவற்றை ஊர்வலமாக காட்டுப்பகுதியில் உள்ள செங்கமலையார் சுவாமி கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.
கோவிலில் கிடா வெட்டி, பொங்கல் வைத்தனர். மேலும் செங்கமலையார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் கிடா விருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஈச்சங்காடு, நாட்டார்மங்கலம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story