சூதாடிய 5 பேர் கைது


சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2021 1:21 AM IST (Updated: 2 Aug 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே நடுவப்பட்டி கிராமத்தில் வச்சக்கார ப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள காலனி தெருவில் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.440-ஐ பறிமுதல் செய்ததுடன், காசு வைத்து சூதாடியதாக நடுவப்பட்டியை சேர்ந்த அனந்தப்பன் (வயது 44), ஜெயராஜ் (65), அந்தோணிராஜ் (64), ஆனந்தராஜ் (50), கண்ணாயிரம் (50) ஆகிய 5 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். 

Next Story