மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்த கணவர் கைது


மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்த கணவர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2021 1:37 AM IST (Updated: 2 Aug 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத் தகராறில் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்த கணவர் கைது செய்யப்பட்டார்

அன்னவாசல்
இலுப்பூர் அருகே உள்ள விட்டாநிலையப்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 45). இவரது மனைவி மதலையம்மாள் (வயது 40). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் வேளாங்கண்ணி இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்தநிலையில் இரண்டாவது மனைவி வேளாங்கண்ணியுடன் சேர்ந்து வாழாமல் அவரது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதனால் முதல் மனைவி மதலையம்மாளுடன் வேளாங்கண்ணி வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது மதலையம்மாள் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து வந்து வேளாங்கண்ணி காலில் வெட்டியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாத வேளாங்கண்ணி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து மதலையம்மாள் மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் வலியால் அலறிய மதலையம்மாளை அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story