திருச்சி மகளிர் சிறையில் தூக்க மாத்திரைகளை தின்று பெண் கைதி தற்கொலை முயற்சி


திருச்சி மகளிர் சிறையில் தூக்க மாத்திரைகளை தின்று பெண் கைதி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 2 Aug 2021 6:56 AM IST (Updated: 2 Aug 2021 6:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மகளிர் சிறையில் தூக்க மாத்திரைகளை தின்று பெண் கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனவைி ஷோபனா என்கிற சத்யா (வயது 40). இவர் 2 வாலிபர்களுடன் சேர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு திருச்சி தென்னூர் வாமடம் அருகே சசிகலா என்ற இளம் பெண்ணை கொன்று கழிவுநீர் குட்டையில் உடலை வீசிய வழக்கில் தில்லைநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 
பின்னர் இந்த வழக்கில் சத்யாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 2019-ம் ஆண்டு திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டு இருந்தது. நேற்று பகல் சத்யா மருத்துவமனையில் இருந்த தூக்கமாத்திரைகளை திடீரென தின்று மயங்கி விழுந்தார். இதை கண்ட சிறை ஊழியர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக சத்யா குடும்பத்தை நினைத்து மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனவிரக்தியில் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story