லால்குடியை அடுத்த வாளாடியில் 2 மளிகை கடைகளில் தீ விபத்து
லால்குடியை அடுத்த வாளாடியில் 2 மளிகைக்கடைகளில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.7 லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
லால்குடியை அடுத்த வாளாடியில்
2 மளிகை கடைகளில் தீ விபத்து
ரூ.7 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
லால்குடி,
லால்குடியை அடுத்த வாளாடியில் 2 மளிகைக்கடைகளில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.7 லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
மளிகை கடையில் தீ விபத்து
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளாடி மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் குமார் மகன் ஆனந்த் (வயது 45). இவர் திருச்சி - அரியலூர் சாலை வாளாடி மெயின் ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று காலை தனது கடையை வழக்கம் போல் திறந்தார். பின்னர் வியாபாரம் செய்ய மின் விளக்குகளை போட்ட போது, மின் கசிவு ஏற்பட்டு மளிகைக்கடையில் தீப்பிடித்தது. மேலும் கடையில் இருந்த கியாஸ் சிலிண்டரும் வெடித்து தீப்பற்றி எரிந்தது.
பொருட்கள் எரிந்து நாசம்
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீ மேலும் பரவி ஆனந்த் கடைக்கு பக்கத்தில் உள்ள ரகுராமன் என்பவரின் மளிகை கடைக்கும் பரவியது. இதில் 2 கடைகளிலும் சுமார் ரூ.7 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்்த தீவிபத்து குறித்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story