உத்தமபாளையம் உள்பட 4 பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்


உத்தமபாளையம் உள்பட 4 பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
x
தினத்தந்தி 2 Aug 2021 9:49 PM IST (Updated: 2 Aug 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் உள்பட 4 பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

உத்தமபாளையம்:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில் பூதிப்புரம், உத்தமபாளையம், ஓடைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, க.புதுப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், முக்கிய வீதிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கை கழுவும் முறைகள் பற்றிய செயல்முறை விளக்கம் அளிப்பது, கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டாக சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் நேற்று பூதிப்புரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. உத்தமபாளையத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் தலைமையில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. க.புதுப்பட்டியில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதேபோன்று ஓடைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் பணியாளர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். 

Next Story