பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் செல்ல தடை


பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 2 Aug 2021 10:17 PM IST (Updated: 2 Aug 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் செல்ல தடை

பேரூர்

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா, ஆடி அமாவாசை விழா, பேரூரில் உள்ள நொய்யல் படித்துறையில் பக்தர்கள், இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு, சப்த கன்னிமார் வழிபாடு, சுமங்கலி பூஜைகளும் நடப்பது வழக்கம். 

இதனால் அங்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.  தற்போது கொரோனா பரவல் ஏற்படுவதை தடுக்க ஆடிப்பெருக்கை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பேரூர் படித்துறைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 அத்துடன் அங்கு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருக்கிறது.  இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆடிப்பெருக்கு மற்றும் 8-ந் தேதி ஆடி அமாவாசை அன்றும் பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் பக்தர்கள் அங்கு செல்வதை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது என்றனர்.  


Next Story