போர் நினைவிடத்தில் ராணுவ அதிகாரி மரியாதை
போர் நினைவிடத்தில் ராணுவ அதிகாரி மரியாதை.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் என்ற ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்துக்கு நேற்று மேற்கு பிராந்திய படைவீரர்களின் தலைமை அலுவலக தலைவர் மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டின் கர்னல் லெப்டினண்ட் ஜெனரல் மன்ஞ்சிந்தர் சிங் வந்தார்.
பின்னர் அவர் நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இங்கு முதன் முறையாக மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கர்னல் வருகை புரிந்து ராணுவ முறைப்படி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story