ஒரே நாளில் 7,900 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 7,900 பேருக்கு கொரோனா தடுப்பூசி.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2-வது டோஸ் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதுக்கு மேல் முதல் டோஸ் செலுத்துகிறவர்களுக்கு அந்தந்த வார்டு வாரியாக டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூரில் உள்ள பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஊட்டியில் ஒரு பள்ளியில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் தடுப்பூசி போடப்பட்டது. ஊட்டியில் 400 பேர் உள்பட நீலகிரி முழுவதும் ஒரே நாளில் 7,900 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story