கட்டுமான தொழிலாளர் மாநாடு
கோவில்பட்டியில் கட்டுமான தொழிலாளர் மாநாடு நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு பாரதி இல்லத்தில், சிதம்பரனார் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு பரமசிவன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் செ.மாரியப்பன், ஒன்றிய செயலாளர் எம்.கணேசன், ஒன்றிய பொருளாளர் முத்துசாமி, மாவட்ட துணைச்செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் ஆன்லைன் நலவாரிய பதிவுகளுக்கான குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். கட்டுமான பொருட்களான ஜல்லி, மணல், சிமெண்டு, செங்கல், கம்பி விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஆற்று மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதே போன்று சிதம்பரனார் மாவட்ட இந்திய கட்டுமான தொழிற்சங்க பேரவை கூட்டம் நகர தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மாரியப்பன், பேச்சிமுத்து, நகர பொருளாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story