வெள்ளாடு


வெள்ளாடு
x
தினத்தந்தி 2 Aug 2021 10:59 PM IST (Updated: 2 Aug 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளாடு

குன்னத்தூர்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சந்தையானது கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தையாகும். இது வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2 மாதங்களாக நடைபெறாத சந்தை இப்போது நடைபெற்று வருகிறது. குன்னத்தூர் பகுதியில் காடுகள் அதிகம் இருப்பதால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் ஆடு, மாடுகள் மற்றும் கோழி, கறிக்கோழி, கட்டு சேவல்களை வளர்த்து வருகிறார்கள். இப்பகுதியில் வளர்த்து வரும் ஆடு, மாடுகள் மற்றும் கட்டு சேவல்களை இப்பகுதி பொதுமக்கள் குன்னத்தூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
 இன்றுசெவ்வாய்க்கிழமை ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடுவதால் நேற்று நடைபெற்ற குன்னத்தூர் சந்தையில் அதிக அளவு பொதுமக்கள் நேர்த்திக்கடனுக்காகவும் மற்றும் தங்களது குலதெய்வங்கள் இஷ்ட தெய்வங்கள் கிடாய் வெட்டி வணங்குவதற்கு நல்ல தரமான‌ கிடாய்களை வாங்கி சென்றனர்.  15 கிலோ எடை கொண்ட வெள்ளாட்டுக்கிடாய் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகி வந்தது. நேற்று நடைபெற்ற குன்னத்தூர் சந்தையில் 15 கிலோ எடை கொண்ட வெள்ளாட்டுக்கிடாய் ரூ.12 ஆயிரம்  வரை விற்பனையானது. அதேபோல் கட்டு சேவல்களும் ரூ.1000ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரை விற்பனையானது.

Next Story