வாழவச்சனூர் வாரச்சந்தையில் ஆடுகளை வாங்குவதற்கு குவிந்த வியாபாரிகள்.
ஆடுகளை வாங்குவதற்கு குவிந்த வியாபாரிகள்
வாணாபுரம்
வாழவச்சனூரில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் வாரச்சந்தை அதிகாலையில் கூடியது. இங்கு ஆடு, மாடுகள் விற்பனையும் நடக்கிறது.
ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாமல் அருகில் இருக்கக்கூடிய கிராமங்களிலிருந்தும் விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்தனர். கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் இருந்தும் அதிக அளவில் பொது மக்கள் வியாபாரிகள் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்தனர். தொடர்ந்து 1ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனைக்கு வந்தது.
ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வருகை தந்ததால் அப்பகுதியில் திருவிழா போல் காணப்பட்டது. நேற்று மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆகி இருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story