புகையிலை பொருட்கள் விற்ற 26 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 26 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 1:57 AM IST (Updated: 3 Aug 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ 675 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோல் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, அந்த பகுதியை சேர்ந்த செய்யது அப்துல் ஹமீம் (வயது 40), காஜா மைதீன் (56) ஆகிய 2 பேரை பாளையங்கோட்ைட போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story