காலாவதியான சாக்லேட்டுகள் பறிமுதல்


காலாவதியான சாக்லேட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Aug 2021 2:11 AM IST (Updated: 3 Aug 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

காலாவதியான சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

திருச்சி
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண்குமார்  மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு இணைந்து திருச்சி சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் உணவு ஏற்றிகொண்டு வரும் வாகனங்கள் நேற்று காலை ஆய்வு செய்யப்பட்டது.கொண்டயம்பேட்டையில் உள்ள டீக் கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 1 கிலோ கலப்பட தேயிலைத் தூள் கண்டறியப்பட்டு சட்டபூர்வமான உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்யும்போது டாஸ்மாக் கடை அருகில் 23 குவாட்டர் பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து கொண்டு இருந்த ஆசாமி ஒருவர் மதுப் பாட்டில்களை போட்டு விட்டு ஓடி விட்டார்.
திருச்சி பெரிய கம்மாள தெருவில் உள்ள கடைகளில் நேற்று மாலை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 2 கடைகளில் காலாவதியான 300 கிலோ சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யபட்டன.  மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிகளில் உள்ள 22 கடைகளின் ஆய்வு செய்யப்பட்டன அப்போது அதில் ஒரு கடையில் 18 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி விற்பனைக்கு வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.  அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story