உப்பள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு 6 வயது சிறுமியை கடத்திய இளம்பெண் கைது


கைதான சப்னம்.
x
கைதான சப்னம்.
தினத்தந்தி 3 Aug 2021 2:30 AM IST (Updated: 3 Aug 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு 6 வயது சிறுமியை கடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.

உப்பள்ளி: உப்பள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு 6 வயது சிறுமியை கடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். 

சிறுமி கடத்தல்

உப்பள்ளி டவுன் ராமலிங்கேஸ்வரர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அஸ்லாம் பல்லாரி. இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. அஸ்லாமுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளாள். அஸ்லாம் வீட்டின் அருகே சபனம்(வயது 25) என்ற இளம்பெண் வசித்து வருகிறார்.

சபனம் வீட்டிற்கு சிறுமி அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு சென்று வரலாம் என்று கூறி சிறுமியை, சபனம் அழைத்து சென்று உள்ளார். ஆனால் இரவு வரை 2 பேரும் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்லாம், சபனத்தின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தனது மகளை, சபனம் கடத்தி சென்றதை அஸ்லாம் உறுதி செய்தார்.

பெங்களூரு போலீசாருக்கு...

 பின்னர் அவர் தனது மகளை சபனம் கடத்தி சென்று விட்டதாகவும், மீட்டு தரும்படியும் கோகுல் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபனத்தையும், சிறுமியையும் தேடிவந்தனர். 

இந்த நிலையில் சபனம் பெங்களூரு சிக்பேட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அவருடன் வசித்த வருவதும் தெரிந்தது. இதனால் சிக்பேட்டை போலீசாருக்கு சிறுமியின் புகைப்படத்தை கோகுல்ரோடு போலீசார் அனுப்பி வைத்தனர். 

கைது-விசாரணை

அந்த புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரித்த போது சிறுமியை சபனம் கடத்தி வந்து சிக்பேட்டையில் ஒரு வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் சிக்பேட்டை போலீசார் சபனத்தை கைது செய்து சிறுமியை மீட்டனர். மேலும் கோகுல்ரோடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் பெங்களூருவுக்கு வந்த போலீசார் சபனத்தை கைது செய்து உப்பள்ளிக்கு அழைத்து சென்றனர். மேலும் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். சிறுமியை கடத்தி சென்றது குறித்து சபனத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story