ஹாசனில் குரங்குகளை கொன்ற பெண் உள்பட 5 பேர் கைது


ஹாசனில் குரங்குகளை கொன்ற பெண் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 2:32 AM IST (Updated: 3 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஹாசனில் குரங்குகளை விஷம் வைத்து கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹாசன்: ஹாசனில் குரங்குகளை விஷம் வைத்து கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

60 குரங்குகள் செத்தது

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா பிக்கோடு அருகே சவுடனஹள்ளி பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் 60 குரங்குகள் செத்து கிடந்தது. 

குரங்குகளுககு யாரோ விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும் இந்த படுபதாக செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது. 

5 பேர் கைது

இந்த நிலையில் குரங்குகளை விஷம் வைத்து கொன்றதாக ஹாசன் அருகே உகனி, கேதனஹள்ளியில் வசித்து வரும் ராமு, யசோதா, மஞ்சு, ராஜேகவுடா, ராமானுஜம் ஆகிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் விளைநிலங்களில் புகுந்து குரங்குகள் அடடகாசம் செய்து வந்து உள்ளது. 

மேலும் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் குரங்குகளை பிடித்து வேறு இடத்தில் விட ராமு, யசோதா கிராம மக்களிடம் பணம் வசூலித்து அதை மஞ்சு, ராஜேகவுடா, ராமானுஜத்திடம் கொடுத்து உள்ளார். அதன்படி அவர்கள் 3 பேரும் கிராமங்களில் சுற்றிய 75 குரங்குகளை பிடித்து சாக்கு மூட்டைகளில் கட்டி வேறு இடத்திற்கு எடுத்து சென்று உள்ளனர். 

ஆனால் சாக்கு மூட்டைகளில் கட்டியதால் மூச்சுத்திணறி 60 குரங்குகள் செத்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. கைதான 5 பேர் மீதும் சக்லேஷ்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story