இரண்டு வீடுகளில் திருடியவர் கைது


இரண்டு வீடுகளில் திருடியவர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 2:44 AM IST (Updated: 3 Aug 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

இரண்டு வீடுகளில் திருடியவர் கைது செய்யப்பட்டார்

திருவெறும்பூர்
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சோழ மாநகர பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டது. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் நவல்பட்டு அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த அம்சாவின் மகன் ரபிக் (வயது 36) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


Next Story