தென்காசியில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தென்காசியில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2021 3:07 AM IST (Updated: 3 Aug 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் பலர் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, திருமண நிதி உதவி, ஊனமுற்றோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டனர். அப்போது திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கரு.வீரபாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர் மற்றும் 12 கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டு சென்றனர். 

Next Story