அரசு பள்ளி சமையலறையில் எண்ணெய்- பருப்பு திருட்டு
அரசு பள்ளி சமையலறையில் எண்ணெய்- பருப்பு திருடப்பட்டுள்ளது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்குள் நுழைந்து சத்துணவு அறை கதவை உடைத்து அங்கிருந்த 25 லிட்டர் சமையல் எண்ணெய், 10 கிலோ பருப்பு உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர். மேலும் தலைமையாசிரியர் அறையை உடைத்து அங்கு ஏதேனும் பணம் இருக்கிறதா? என்று பீரோ, மேஜை உள்ளிட்டவற்ற உடைத்து பார்த்துள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்காததால் எண்ணை மற்றும் பருப்புடன் தப்பி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story