குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Aug 2021 3:09 AM IST (Updated: 3 Aug 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாமரைக்குளம்:
அரியலூர் நகராட்சி பகுதிகளில் குழாய்களில் மின்மோட்டார்கள் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையர் மனோகரன் வழிகாட்டுதலின்படி அதிகாரிகள் அரியலூர் பெரிய அரண்மனைத் தெரு, ஒப்பில்லாத அம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்மோட்டார்கள் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது குழாய்களில் குடிநீர் உறிஞ்ச பொருத்தப்பட்டிருந்த 3 மின் மோட்டார்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து, நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Next Story