மணல் விற்ற 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது


மணல் விற்ற 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 3:10 AM IST (Updated: 3 Aug 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

மணல் விற்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மீன்சுருட்டி:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமதுரை(வயது 47), கொளஞ்சிநாதன், தேவராஜ். இவர்கள் 3 பேரும் சேர்ந்து மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தில் சாக்குகளில் மணலை அள்ளி எடுத்து வந்து மோட்டார் சைக்கிள்களில் கொண்டு சென்று விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது 3 பேரும் மணல் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமதுரையை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கொளஞ்சிநாதன், தேவராஜ் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story