மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது


மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 3:10 AM IST (Updated: 3 Aug 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் சின்னநாகலூர் குடித்தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி. இவருடைய மனைவி கனிமொழி(வயது 25). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று கனிமொழி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த பழனியாண்டி, கனிமொழி நடத்தையில் சந்தேகப்பட்டு தகாத வார்த்தையால் திட்டி அருகில் இருந்த இரும்பு கம்பியால் கனிமொழி தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கனிமொழி அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் கனிமொழி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பழனியாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story