வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்
சிவகாசியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று அதிவீரன்பட்டி கிராமத்தில் அதிரடியாக சில வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது ராசு மனைவி கருப்பாயின் வீட்டின் பின்புறம் சுமார் 8 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து கருப்பாயி (வயது 41), அவரது கணவர் ராசு (44), உறவினர் முருகன் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, தேனி மாவட்டங்களில் இருந்து கஞ்சா வரவழைக்கப்பட்டு சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story