மாதவரம் ரவுண்டானா அருகே தடுப்பு சுவரில் பஸ் மோதல்; 8 பேர் படுகாயம்


மாதவரம் ரவுண்டானா அருகே தடுப்பு சுவரில் பஸ் மோதல்; 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Aug 2021 10:31 AM IST (Updated: 3 Aug 2021 10:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி அரசு பஸ் (தடம் எண் 114) 15-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

அம்பத்தூர் புதூரை சேர்ந்த டிரைவர் சேகர் (வயது 50) பஸ்சை ஓட்டினார். மாதவரம் ரவுண்டானா அருகே வந்தபோது திடீரென சாலையோர தடுப்பு சுவரில் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த பிரபாகரன் (35), நாகராஜ் (49), ஜெயபிரகாஷ் (59), வீரசேகர் (42), பார்த்தசாரதி (31) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் சேகரிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story