கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பு; கடந்த 47 நாட்களில் பூண்டி ஏரிக்கு 2.31 டி.எம்.சி. வரத்து
கண்டலேறு அணையில் இருந்து கடந்த 47 நாட்களில் பூண்டி ஏரிக்கு 2.31 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தடைந்தது.
பூண்டி ஏரி
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜூன் 16-ந்தேதி முதல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் ஏரிக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் வந்த நிலையில், படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகமாகியது.இந்த நிலையில் நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 785 கன அடி வீதமும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 659 கன கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
2.31 டி.எம்.சி வரத்து
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,133 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 30.76 அடி பதிவாகியது. 1,922 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து 47 நாட்களில் 2.31 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நீர்வரத்து இதேபோல் தொடருமானால் இன்னும் சில தினங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்ப வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story