சங்கிலி கருப்பராயசுவாமி கோவில் ஆண்டு விழா
சங்கிலி கருப்பராயசுவாமி கோவில் ஆண்டு விழா
வடவள்ளி
கோவை லாலிரோட்டில் மிகவும் பழமைவாய்ந்த சங்கிலி கருப்பராயசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு அன்று ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆண்டு விழா நேற்று நடந்தது
அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சங்கிலி கருப்பராயசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சந்தன கவசத்தில் சங்கிலி கருப்பராயசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது
இது போல ஏழு கன்னிமார் அம்மன்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
கன்னிப்பெண்கள் படையல் இட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story