நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் உள்பட 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
நாட்டு வெடிகுண்டு
தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியில் உள்ள பாலத்தின் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்து இருந்ததாக தூத்துக்குடி நயினார்புரத்தை சேர்ந்த கொம்பையா மகன் யமஹா முருகன் என்ற முருகன் (வயது 38) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று மணப்பாடு லயன்தெருவை சேர்ந்த ஜோசப் மகன் ரூபன் (39) என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக குலசேகரன்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குரும்பூர் அருகே உள்ள ராஜபதியை சேர்ந்த ரூபன் மகன் முத்துக்குமார் (28) என்பவரை ஆழ்வார்திருநகரி போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். கைதான 3 பேரும் சிறையில் உள்ளனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் யமஹா முருகன் என்ற முருகன், ரூபன், முத்துக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.ண்டர் சட்டம் பாய்ந்ததுRelated Tags :
Next Story