மேகதாது அணை விவகாரத்தில் பாஜனதா இரட்டை வேடம் போடுகிறது


மேகதாது அணை விவகாரத்தில் பாஜனதா இரட்டை வேடம் போடுகிறது
x
தினத்தந்தி 3 Aug 2021 10:04 PM IST (Updated: 3 Aug 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை விவகாரத்தில் பாஜனதா இரட்டை வேடம் போடுகிறது

கோவை

மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

ஆளும்கட்சி நெருக்கடியல்ல

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

கோவை மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் நேர்மையாக வாக்களித் தார்கள். எங்களை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு போய் சேர்த்த அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம். 

கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க போக முடி யாதது ஆளும் கட்சியின் நெருக்கடியல்ல. 

இது மக்களுக்கான நெருக் கடி. கட்சி பேதம் பார்த்து நெருக்கடி கொடுக்கவில்லை, மக்களின் நலன்பார்த்து கொடுத்து இருப்பதாகவே நான் கருதுகிறேன். 


கொரோனாவால் பல நல்ல தொண்டர்களை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது கூட அந்த குடும்பங்களை சந்தித்து பேசி உள்ளேன். பெண்களை முன்நிறுத்த வேண்டியது மக்கள் நீதி மய்யத்தின் கடமையாக உள்ளது.

கொங்குநாடு

கொங்குநாடு என்பதை அரசியல் கோஷமாகவும், மக்களின் தேவை யாகவும் நான் பார்க்க வில்லை. மக்களே இதற்கான சரியான பதிலை சொல்வார்கள். இது ஒரு அரசியல் கட்சியின் யோசனையாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இது ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனி. 

முன்பு கிழக்கு இந்தியா கம்பெனி என்று ஒன்று இருந்தது. இன்று நார்த் இந்தியா கம்பெனி என்று ஒன்றை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். அதை அனுமதிக்க மாட்டார்கள் மக்கள் என்று நான் திட்டவட்டமாக நம்புகிறேன். 

நீங்கள் இதை ஒரு நாடு என்று சொல்லி எங்கள் தோளில் கை வைத்தால், உங்களை தோளில் தூக்கி வைத்து கொள்ள நாங்கள் தயார். 

ஆனால் உங்கள் வியாபாரத்திற்கு சவுகரியமாக இருக்கும் என்று எங்கள் வளங்களை எல்லாம் நீங்கள் தனியாருக்கு கொடுக்க முயற்சி செய்தால், அது கம்பெனிதான். எல்லாம் பிரிவினை பேசும் விஷயங்களாக இருக்கின்றன.

சினிமா தொழில்

பெரிய நியாயம் சொல்லும் மையங்களை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மூடிக்கொண்டு வருகின்றனர். அது சினிமா தொழிலிலும் நடக்கிறது.

 அதற்கான அழுத்தமான குரலை வெளிப்படுத்த தான் நான் டெல்லி வரை சென்று வர வேண்டியதாக இருந்தது. எல்லா முறையீட்டு மையங்களையும் தகர்த்தெறிந்து விட்டால், யாரும், யாரிடத்திலும் முறையிட முடியாது.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் சம்மந்தப்படாமல் மக்களுக் கானதாக இருக்க வேண்டும். 

அது மக்களின் ஆட்சியாக இருப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

 பறிக்கப்பட்ட உரிமைகள் மக்களிடம் வழங்கப்பட வேண்டும். கருணாநிதிக்கு மக்கள் மனதில் இன்னமும் இடமிருக்கின்றது.

இந்தியாவிலேயே 26 படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தவன் நான் தான். எனவே இரட்டை வேடம் போடுபவர்களை நான் சட்டென்று கண்டு பிடிப்பேன்.

 மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம்தான் போடுகிறது. அவர்கள் இருவருமே மத்திய அரசின் பொம்மைகள்தான்.

முழுநேர அரசியல்வாதி

கொரோனா தொற்றில் இந்த அரசு இயன்றதை செய்கிறது, அது போதாது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. முழுநேர அரசியல்வாதி என எவரும் இல்லை. 

எனது தொழில் நடிப்பு. உள்ளாட்சி தேர்தல் எனது கடமை. மக்களாட்சி மலர வேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள்.

தோல்வி வந்தால் விட்டுட்டு போயிடுவேன் என்றால் சினிமாவையும் விட்டுட்டு நான் போயிருக்கனும், தோல்வி தந்த பாடம் அடுத்த வெற்றிக்காக அமையும் என்ற பாடம் கோவை மக்கள் கொடுத்து இருக்கின்றனர். 

கூட்டணி உண்டா?


கட்சியில் இருந்து வெளியேறியவர்களால் எவ்வித பாதிப்பும் இல்லை. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தென்பட வில்லை, லாபம் என்று எழுதி வைத்திருந்த போர்டை மட்டுமே பார்த்தேன். 

உள்ளாட்சி தேர்தலுக்கான பணி தொடங்கி விட்டோம். கூட்டணி உண்டா?, இல்லையா? என்பதை பிறகு கூறுகிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.



Next Story