ரேஷன் மண்எண்ணெய் பதுக்கிய 2 பேர் கைது


ரேஷன் மண்எண்ணெய் பதுக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 10:23 PM IST (Updated: 3 Aug 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் மண்எண்ணெய் பதுக்கிய 2 பேர் கைது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் மண்எண்ணெய் பதுக்கிய 2 பேர் கள்ளச்சந்தைக்காரர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மண்எண்ணெய் பதுக்கல்
கோவில்பட்டி காந்தி அரவை மில் ரோட்டில் கடந்த 23.7.21 அன்று தூத்துக்குடி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த சீராளும்பெருமாள் மகன் மணி (வயது 62), கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த அழகுவேல் மகன் பாலமுருகன் (45) ஆகியோர் பொதுவினியோகத்துக்கு உரிய 5 ஆயிரத்து 610 லிட்டர் மண்எண்ணெயை பதுக்கி வைத்து இருந்தனர். உடனடியாக போலீசார் 2 பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். மண்எண்ணெயையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளச்சந்தைக்காரர் சட்டம்
இதைத்தொடர்ந்து மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் உத்தரவின் பேரில், மணி, பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கள்ளச்சந்தைக்காரர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கள்ளசந்தைக்காரர் தடுப்பு சட்டத்தின் கீழ் மணி, பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
மேலும் ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்கள் மீது கள்ளச்சந்தைக்காரர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
.........................

Next Story