முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Aug 2021 10:29 PM IST (Updated: 3 Aug 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே முதியவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி : 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னராமகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 76). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

அதன்பின்னர் வீடு திரும்பிய அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பெருமாள் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 


உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் இறந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story