குன்னூர் வெலிங்டனில் மதியம் 1 மணி வரை கடைகளை மூட உத்தரவு


குன்னூர் வெலிங்டனில் மதியம் 1 மணி வரை கடைகளை மூட உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2021 10:38 PM IST (Updated: 3 Aug 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் வெலிங்டனில் மதியம் 1 மணி வரை கடைகளை மூட ராணுவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

ஊட்டி,

குன்னூர் அருகே வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு உள்ளது. இங்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் முப்படை அதிகாரிகளுடன் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடுகிறார். 

இந்த நிலையில் நேற்று வெலிங்டன் கண்டோன்மெண்ட் தலைமை செயல் அதிகாரி மூலம் அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 

அதில், மிக மிக முக்கிய பிரமுகர் வருகை தருவதால் இன்று மதியம் 1 மணி வரை கடைகளை மூடுமாறும், அவர் வந்து செல்லும் வரை கடைகளை அடைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று மாலை முதல் மூடப்பட்டன.

Next Story