கோத்தகிரியில் மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


கோத்தகிரியில் மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 3 Aug 2021 10:42 PM IST (Updated: 3 Aug 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) ஆகியவற்றின் சார்பில் மாடி தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

 மிளிதேன் கிராமத்தில் நடந்த இந்த பயிற்சிக்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜியலட்சுமி தலைமை தாங்கி, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வாணி ராஜேஷ் மாடி தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டத்தில் பழங்கால சாகுபடி முறையில் இயற்கை விவசாயம் செய்வது குறித்து விளக்கினார். 

இதையடுத்து  கோத்தகிரி அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் ராம்தாஸ், அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் கிருஷ்ணன் பேசினர். 

இந்த பயிற்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் வரவேற்றார். 
முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலா நன்றி கூறினார்.

Next Story