அரசு மருத்துவமனையில் கண்ணாடி கதவுகள் உடைப்பு


அரசு மருத்துவமனையில் கண்ணாடி கதவுகள் உடைப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 10:47 PM IST (Updated: 3 Aug 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அரசு மருத்துவமனையில் கண்ணாடி கதவுகளை உடைத்த செவிலியரின் கணவரை போலீசார் கைது செய்தனர்



சின்னசேலம்

அரசு மருத்துவமனை

சின்னசேலம் அருகே உள்ள பெருமங்கலம் கிராமத்தை  சேர்ந்தவர் மாரிமுத்து மகள் பாப்பாத்தி(வயது 30). இவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சின்னசேலத்தை அடுத்த பாண்டியன்குப்பம் கிழக்கு தெருவைச் சேர்ந்த சோலைமுத்து மகன் ரமேஷ்(37) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

கண்ணாடி கதவுகள் உடைப்பு

இந்த நிலையில் பாப்பாத்தி நேற்று மதியம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது இரும்பு குழாயுடன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த ரமேஷ் கண்ணாடி கதவுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். மேலும் பணியில் இருந்த செவிலியர்களை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததோடு தட்டிக்கேட்ட மருத்துவமனை ஊழியர் லட்சுமிநாராயணனையும் அவர் தாக்கி மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பாப்பாத்தி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story