1,000 மரக்கன்றுகள் நடும் பணி


1,000 மரக்கன்றுகள் நடும் பணி
x
தினத்தந்தி 3 Aug 2021 11:54 PM IST (Updated: 3 Aug 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூடுதல் பெருந்திட்ட வளாகத்திலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலக வளாகத்தில் ரூர்பன் திட்டத்தில், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் பழவகை மரக்கன்றுகள் மற்றும் காய்கறி வகை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி நாற்று வளர்ப்பு பண்ணை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் ஒரே நேரத்தில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் .சக்திவேல், தர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story