போலீசுக்கு பயந்து ஓடிய விவசாயி தவறி விழுந்து சாவு


போலீசுக்கு பயந்து ஓடிய விவசாயி தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 4 Aug 2021 12:06 AM IST (Updated: 4 Aug 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி நடந்த சேவல் சண்டையின்போது போலீசாரை கண்டதும் பயந்து ஓடியவர் தவறி விழுந்து இறந்தார். அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதால் அவர் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாயல்குடி
அனுமதியின்றி நடந்த சேவல் சண்டையின்போது போலீசாரை கண்டதும் பயந்து ஓடியவர் தவறி விழுந்து இறந்தார். அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதால் அவர் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேவல் சண்டை 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் ஆடிப்பெருக்கையொட்டி கண்மாய் பகுதியில் சேவல் சண்டை நடத்தப்பட்டது. இந்த போட்டி அனுமதியின்றி நடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடலாடி போலீசார் அங்கு சென்றனர். போலீசுக்கு பயந்து சேவல் சண்டை போட்டி நடத்தியவர்கள் அங்கிருந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர். 
அப்போது பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிநாதன்(வயது 45) என்பவர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். 
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கியதால்தான் ஜோதிநாதன் இறந்தார் என்று கூறி முதுகுளத்தூர்-சாயல்குடி சாலையில் அவரது உறவினர்கள், கிராமமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். 
போராட்டம்
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கூடுதல் சூப்பிரண்டு லயோலோ இக்னேசியஸ், துணை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, கடலாடி தாசில்தார் சேகர், இன்ஸ்பெக்டர்கள் ஜான்சிராணி, மோகன் ஆகியோர் கிராம மக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மதுபோதையில் தாக்கியதால் தான் ேஜாதிநாதன் இறந்ததாகவும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், ஜோதிநாதனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஜோதி நாதன் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி கடலாடி போலீஸ் நிலையத்தையும் ேநற்று இரவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
பரபரப்பு
இதையடுத்து, ஜோதிநாதன் இறப்பு குறித்து முறையான விசாரணை நடைபெறும். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். 
இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் ஜோதிநாதன் உடல் பரிசோதனைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஜோதிநாதன் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story