சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2021 1:10 AM IST (Updated: 4 Aug 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

கரூர்
கரூர் மாவட்டம் நொச்சிபட்டியைச் சேர்ந்த தர்மராஜிக்கும்(வயது 27), 13 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதாக அரவக்குறிச்சி வட்டார நல அலுவலர் கல்யாணிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி விசாரணை நடத்தினார். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலில் உள்ள முருகன் கோவிலில் தர்மராஜிக்கும், சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது உறுதியானது. அதன்பேரில் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் தர்மராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தர்மராஜின் தந்தை துரைசாமி மற்றும் தாய் அருக்காணி மற்றும் சிறுமியின் தந்தை மாரியப்பன், தாய் ராஜாத்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story